உசிலம்பட்டி:
இயேசு கிறிஸ்து மக்களுக்காக பட்ட துன்பங்களையும், உயிர்ப்பிப்பையும் நினைவு கூறும் வகையில், கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டருக்கு முன்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்துவர்களால் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக,மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த திருச்சபைகள் சார்பில் குருத்தொலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது. உசிலம்பட்டி ஆர்.சி.திருச்சபையிலிருந்து, கையில் குருத்தோலை ஏந்தி, ஓசன்னா பாடல்கள் பாடினர்.
பாதிரியார்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள், உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பேரையூர் ரோட்டில் உள்ள குழந்தை ஏசு ஆலயம், டி.இ.எல்.சி திருச்சபை, சிஎஸ்ஐ திருச்சபை என, அவரவர் தேவாலயங்களுக்குச் சென்று குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுசரித்தனர்.