Close
ஏப்ரல் 15, 2025 9:34 மணி

பாப்பாபட்டியில் தேவர் பட்டம் சூட்டும் விழா..!

தேவர் பட்டம் சூட்டுவிழா

உசிலம்பட்டி:

மதுரை, பாப்பாபட்டியில் அய்யனார் குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில்‌,உள்ள மந்தையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட பெரிய தேவர் பட்டம் சூட்டும் விழா பாப்பாபட்டி பத்து தேவர் தலைமையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் முன்னிலையில் தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. பெரிய தேவர் வகையறா பிரகாஷ் என்பவருக்கு தேவர் பட்டம் சூட்டப்பட்டது.

பத்து தேவர் மாமன் மார்கள் நெற்றியில் திருநீறு வைத்து தேவர் பட்டத்தினை சூட்டினார்கள். பின்னர், அவருக்கு மாலை சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து,
பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி ஊர்வலமாக சென்று பாப்பாபட்டி அருள்மிகு ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் வழிபாடு செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top