Close
ஏப்ரல் 15, 2025 11:23 மணி

‘விவசாயிகளை காப்போம்’ வாசகத்துடன் தர்பூசணி வழங்கிய தவெகவினர்..!

தர்பூசணி வழங்கும் தவெகவினர்

விவசாயிகளை காப்போம்.. எனும் வாசகத்துடன் பல டன் எடையுள்ள தர்பூசணிகளை பொது மக்களுக்கு இலவசமாக அளித்து விவசாயிகளை காப்போம் என தமிழக வெற்றிக்கழக காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய சார்பில் வேண்டுகோள் விடப்பட்ட சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பொதுமக்களுக்கு அனைத்து கட்சி சார்பிலும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் எஸ் கே பி தென்னரசு அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களிலும் இன்று பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் பழங்கள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர் தலைமையில் எ.வி.எம் வினோத் ஏற்பாட்டின் பேரில் இன்று ஆர்ப்பாக்கம், வேடல் , அவளூர், களக்காட்டூர், தம்மணூர் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

அதில் ஒரு பகுதியாக அவளூர் கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழாவினை தொடர்ந்து தற்போது தர்பூசணி பயிரிடப்பட்ட விவசாயிகளின் நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் அதனை சிறிதளவு மீட்க வேண்டும் என்ற நோக்கில் இன்று பல டன் எடையுள்ள தர்பூசணி பழங்கள் தெற்கு ஒன்றியத்தில் உள்ள விவசாயகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு இளையனார்வேலூர் – வாலாஜாபாத் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு விவசாயிகளை காப்போம் விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வோம் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தர்பூசணியை பெற்றுக் கொண்ட அனைவரும் விவசாயி காப்போம் என கூறி அளித்த இளைஞர்களின் குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் செயலை பாராட்டி சென்றனர்.

இந்நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் சுகுமார் உதயன் சுகன் விஜி பார்த்திபன் சதீஷ் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top