காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாளை முன்னிட்டு 1181 பயனாளிகளுக்கு ரூ. 24.80 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி. . சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன்,மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மேயர் மகாலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அமைச்சர் காந்தி பல்வேறு துறைகள் சார்பாக 1181 பயனாளிகளுக்கு ரூ. 24.80 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இவ்விழாவில் பல்வேறு துறைகள் சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்தனர்.