108திவ்ய தேசங்களில் அஷ்டபுஜங்களைக் கொண்டு அமைந்துள்ள ஒரே பெருமாளான அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவம் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார். பக்தர்கள் வழியெங்கும் சுவாமி தரிசனம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் உள்ளது .8 கரங்களைக் கொண்ட ஒரே திவ்யதேச கோவில் இதுதான்.
மேலும் தொண்டை நாட்டில் உள்ள பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் கொண்டு அமைந்துள்ள ஒரே கோவில் இந்த அஷ்டபுஜ பெருமாள் கோவில்
இக்கோவிலின் பிரம்மோற்சவ மூன்றாம் நாள் முன்னிட்டு அஷ்டபுஜ பெருமாள் கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார். வெளிர் பச்சை நிற பட்டாடை உடுத்தி, திருவாபரணங்கள் சூடி, கொண்டை அணிந்து, பலவண்ண மலர் மாலைகள் சூடி கருட சேவை வாகனத்தில் அஷ்டபுஜ பெருமாள் காட்சியளித்தார்
முன்னதாக காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்து , தீப ஆராதனையுடன் காட்சியளித்த பெருமானை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என சுவாமி தரிசனம் செய்தனர்.
கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள் வரதராஜ பெருமாள் கோவில் அடைந்து அங்கு நான்கு மாத வீதிகளை வலம் வந்து பின்பு மீண்டும் தன் கோவிலை வந்தடைவார்.
வழியெங்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்