காரியாபட்டி:
காரியாபட்டி சித்தனேந்தல் கிராமத்தில், மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே சித்தனேந்தல் பால்ச்சாமி தேவரின் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பால்ச்சாமி ராஜம்மாள் தகவல், உதவி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் விழா சித்தனேந்தல் கிராமத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சிநேக லதா தலைமை வகித்தார் நிர்வாகிகள் ருக்மணி வசந்தா சாந்தி, ஜெயா ஆகியோர் முன்னிலை. வகித்தனர். சென்னை சைதாப்பேட்டை இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் சந்தோஷ் குமார் ,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 182 பேருக்கு கல்வி நிதி உதவி வழங்கினார் .
நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் சந்திரசேகர் அக்ரி கணேசன் ராஜேந்திரன் , ஜெயபெருமாள், ஊரக வளர்ச்சித் துறை நிர்வாக ஆணையாளர் பொன்னையா , எஸ்.பி.எம் டிரஸ்ட் அழகர்சாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்,கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.