வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம், வடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கீரைகளில் காணப்படும் முக்கிய புழு பிரச்சனை – இலை மடிப்பு பூச்சியை கட்டுபடுத்த வேப்பெண்ணெய் தெளிப்பு குறித்து ஒரு செயல் முறை விளக்கமளித்தார்.
இதில் வேப்பெண்ணெய் தெளிப்பு எவ்வாறு தயாரிக்கப்பட வேண்டும், அதை எவ்வாறு கீரைகளுக்கு தெளிக்க வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு நேரில் செய்து காட்டினார். மேலும், இதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் பற்றியும் விளக்கி பேசினார்.