சோழவந்தான் :
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் ஐயப்பன் கோவில் முன்பு உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி. குமார், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கல்லணை மனோகரன் முடுவார்பட்டி கிளைக் கழக செயலாளர்கள் கே.கே.காமாட்சி, எஸ்.முத்து, பிரதிநிதி ஏ மூர்த்தி ஜெகதீசன் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.