Close
ஏப்ரல் 19, 2025 2:00 மணி

வாழைக்குலை ஊட்டக்கரைசல் நுட்பம் : வேளாண் மாணவி விளக்கம்..!

வாழைக்குலை ஊட்டச்சத்து குறித்து விளக்கும் வேளாண் மாணவி

வாடிப்பட்டி:

மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவி ம.கிருஷ்ணவேணி கிராமப்புற வேளாண்மை அனுபவ பணித் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், குட்லாடம்பட்டி கிராமத்தில் வாழையின் மகசூலை அதிகரிக்க வாழைக்குலை ஊட்டக்கரைசல் நுட்பம் பற்றி வாழை விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தார்.

500 கிராம் புதிய மாட்டு சாணத்தில் 100 மில்லி தண்ணீர் கலந்து அதில் 15 கிராம் (தோராயமாக 7.5 கிராம் யூரியா) மற்றும் 7.5 கிராம் சல்பேட் ஆஃப் பொட்டாஷ் ஆகியவற்றைக் கலந்து, பழம் வைத்தவுடன் கொத்தின் முனையில் ஊட்டக்கரைசல் உள்ள பிளாஸ்டிக் பையை ஒரு வலுவான நூலால் கட்டி வேண்டும்.மேலும் இந்த நுட்பத்தால், சிகிச்சையளிக்கப்படாத குலைகளை விட கொத்து எடை 60-67% அதிகரித்தது கண்டறியப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top