சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அதற்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை கோவில் முன்பு நடைபெற்றது கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் பக்தர்கள் ஆகியோர் முகூர்த்தக்கால் நட்டனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரௌபதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் வருகின்ற மே 7ஆம் தேதி சோழவந்தான் மந்தைக்களத்தில் நடைபெற உள்ளது.