இரட்டை இலை சின்னம் பாதுகாப்பு , அமலாக்கத்துறை நடவடிக்கையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பாஜகவுடன் கபட கூட்டணி வைத்துள்ளார் என திமுக மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி காஞ்சிபுரத்தில் குற்றச்சாட்டு..
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தமிழக முழுவதும் நடந்து வருகிறது.
அவ்வகையில் திமுக மாணவர் அணி சார்பாக மண்டல அளவில் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் துவங்கி உள்ளது.
முதலாவதாக மண்டலம் இரண்டு சார்பாக காஞ்சிபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், காஞ்சிபுரம் தெற்கு , விழுப்புரம், விழுப்புரம் தெற்கு வேலூர் ராணிப்பேட்டை, திருப்த்தூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அணி நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதில் மாநில திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் ஆறு நிர்வாகிகள் உடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் விளக்கியும், இனி வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
குறிப்பாக திமுக அரசின் சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் சாதனைகள் குறித்த விளக்கங்களை மாணவரணி சார்பில் வெளியிடுதல், தலைமைக் கழகம் அறிவுறுத்தும் அறிவுரைகளின் படி செயல்படுதல் உள்ளிட்ட இவைகள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.
இன்று மதியம் வரை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, நீட் தேர்வு காரணமாக 22 மாணவர்கள் உயிரிழந்ததாகவும் அதனை தடுக்க திமுக தவறியதாக கூறிய அனைத்தும் தவறானது என்பதை மாணவர்கள் சார்பில் நிரூபிக்கப்படும்.
அப்போது முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும், இரட்டை இலை பாதுகாத்துக் கொள்ளவும் அமலாக்கத்துறை சோதனைகளில் இருந்து தப்பிக்கவே தன்னை பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து தப்பித்துக் கொண்டார் எனவும் , நீட் தேர்வு ரகசியம் என்ன என கேட்கும் நிலையில் இதைத்தான் மாணவர் அணி வெளியிட உள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்