சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய விழா நடைபெற்றது.
வி என் எஸ் கார்த்திகேயன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணா ஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினர்.
மா.பலகை, அத்தி பலகையில் உருவேற்றம் செய்யப்பட்ட சுவாமிகளை திருக்கோவிலில் வைத்து. புனித நீர் தெளித்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் அயன் குருவித்துறை ஸ்ரீ பேச்சியம்மன் இறைப்பணி சங்கத்தினர் செய்திருந்தனர்.