Close
ஏப்ரல் 22, 2025 3:30 மணி

பிராமண சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு..!

வைதீக சமாஜம் நடத்தும் அபரகிரியா தோட்டத்திற்கு வாட்டர் ஹீட்டர் வாட்டர் டிஸ்பென்சர் வழங்கினார்கள்.

மதுரை:

தமிழ்நாடு பிராமணர் சங்கம் மதுரை மாவட்டத்தின் 2025 முதல்2030 ஆண்டுக்கான மதுரை மாவட்ட தேர்தல் நடந்ததில் ,ஆர் ஜெயஸ்ரீ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் .இன்று நடைபெற்ற விழாவில், மாவட்ட தேர்தல் அதிகாரி குருராஜன் , மாவட்டத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார்.

விழாவில் ,எஸ் .எஸ். காலனி கிளை மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி நிகழ்வினை தொகுத்து வழங்கினார். டாக்டர் டி. ராமசுப்பிரமணியன், விசுவாஸ் புரமோட்டர்ஸ் சங்கர சீதாராமன் சிருங்கேரி மடத்தின் தர்மாதிகாரி நடேஷ்ராஜா, பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட் சேர்மன் சங்கரநாராயணன் ,சான் மேக் சங்கரநாராயணன், அம்மா கேட்டரிங் உரிமையாளர் பி எஸ் ஜி கிருஷ்ண ஐயர், தமிழ்நாடு பிராமண சங்கத்தின் சட்ட ஆலோசகர் என் சுந்தரேசன், சமூக ஆர்வலர் இல அமுதன் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிக வாழ்த்துரை வழங்கினார்கள்.

மதுரை மாவட்டத்தின் சார்பாக மாவட்டத் தலைவி ஜெயஸ்ரீ ஸ்ரீராம், வைதீக சமாஜம் நடத்தும் அபரகிரியா தோட்டத்திற்கு வாட்டர் ஹீட்டர் வாட்டர் டிஸ்பென்சர் வழங்கினார்கள். முடிவில், மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஸ்ரீகுமார் நன்றி கூறினார். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இன்று முதல் கோடை காலத்தை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் எஸ். எஸ். காலனி கிளையின் சார்பாக நீர்மோர் தண்ணீர் பந்தல் எஸ் எஸ் காலனி டிரஸ் மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top