Close
ஏப்ரல் 23, 2025 6:56 மணி

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்..!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம் செய்துகாட்டும் வேளாண் கல்லூரி மாணவி

வாடிப்பட்டி :

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ,இளங்கலை (மேதமை)அறிவியல் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி க.கோமளவள்ளி கிராமப்புற விவசாயப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் டி.ஆண்டிபட்டி கிராமத்தில் நெல் சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த இனக் கவர்ச்சி பொறி வைப்பது குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

இந்த பொறி பூச்சி கொல்லிகள் வைப்பதற்கு ஒரு மாற்றாக உள்ளது. பூச்சிகளை கண்காணிக்க,கட்டுப்படுத்த இது மிகவும் பயனுள்ளது எனக் கூறி நெல் வயலில் ஒரு ஹெக்டேர் அளவில் 12 பொறிகள் வைத்து தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம் என்று கூறி பொறி வைத்துகாட்டி செயல் விளக்கமளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top