Close
ஏப்ரல் 25, 2025 6:28 மணி

திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக திண்ணை பிரசாரம்..!

திமுக ஆட்சியை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்ட அதிமுகவினர்

மக்கள் விரோத திமுக ஆட்சி இனி நமக்கு தேவையா? என்ற வாசகத்தை முன்னிறுத்தி கடந்த நான்கு வருடங்களாக செயல்படாத திமுக மாடல் ஆட்சி இனியும் நமக்கு தேவையா? என்ற கேள்வியை முன்னிறுத்தி திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு, கள்ள சாராயம் , கஞ்சா மது போதை, நீட்மரணம் உள்ளிட்ட செயல்களை தடுக்க தவறிய திமுக அரசின் விஷயங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில், திண்ணை பிரச்சாரங்களை காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், திண்ணை பிரச்சாரம் என இன்று காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பகுதியான ரயில்வே சாலையில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் மற்றும் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் காய்கறி சந்தை வியாபாரிகள், காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் என பல தரப்பினருக்கும் அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி திமுக ஆட்சி அவல நிலைகளை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமான பங்கு பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top