வாடிப்பட்டி:
மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சி நடத்தினர்.
இக்கண்காட்சி இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில், உயிர் உரங்கள்,பூச்சி விரட்டி திரவியங்கள், பொறிகள், ஒருங்கிணைந்த பண்ணையம் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இக்கண்காட்சியில் செம்மினிப்பட்டி கிராம விவசாயிகள் மேலும் வேளாண் உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் கலந்து கொண்டு இக்கண்காட்சியை கண்டு களித்தனர்.
கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியின் கீழ் வாடிபட்டியைச் சேர்ந்த செமினிபட்டி என்னும் கிராமத்தில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வேளாண் கண்காட்சி நடத்தினர்.
இக்கண்காட்சியில் வீன்பொருட்களில் இருந்து விவசாயமும் தொழில்நுட்பமும் என்னும் கருத்தை மையமாக கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் முறை, பாக்கு பாளை தட்டு,நெல் வகைகள்,தேங்காய் செரட்டை கலை,பஞ்சகவ்யம், பசுமைக்குடில், தேனிப்பெட்டி, பனீர் உற்பத்தி கருவி, பூஜிய ஆற்றல் குளிர் அறை , தேமோர் கரைசல், 3g கரைசல் ஆகியவற்றை விவசாயிகளுக்கு நேரடி மாதிரியாகவும் விவசாயம் சம்மந்தமான செய்திகளை விலகபடமாகவும் வைத்தனர்.
இதில் வேளாண் உதவி இயக்குனர் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் கலந்து கொண்டனர்.