Close
ஏப்ரல் 26, 2025 7:23 மணி

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஒரு மணி நேர புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்..!

வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்ட கிளை வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கவட்டக்கிளை தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.

கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாசானம் தொடக்கி வைத்தார். இந்த ஆர் பாட்டத்தில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி யும்,காலி பணியிடங்களை நிரப்பும் கோரியும், பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான கோஷங்கள் எழுப்பினர்.

அனைத்து துறை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் வட்ட கிளை செயலாளர் வேல் மயில் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் வட்டக்கிளை பொருளாளர் கென்னடி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top