Close
ஏப்ரல் 27, 2025 9:10 மணி

அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா..!

முளைப்பாரி எடுத்துவந்த பெண்கள்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முன்னதாக, முகூர்தகால் ஊன்றும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கரகம் ஜோடினை செய்து மேளதாளம் வாணவேடிக்கையுடன், ஊர்வலமாக வந்து, இருப்பிடம் சேர்ந்தது.

அதனைத் தொடர்ந்து,பக்கர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்கினிசட்டி எடுத்தல் நிகழ்சி நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானமும் நடைபெற்றது. கோவிலில் இருந்து கரகம் எடுத்து முளைப்பாரி கரைக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சத்திர வெள்ளா லபட்டி கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top