மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சுவாமி சிவஆலயத்தில் ராகு..கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக,அர்ச்சணைகள் நடைபெற்றது.
ராகு பகவான் மீனராசியிலிருந்து..கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து… சிம்மராசிக்கும் இன்று மாலை 4.58..மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதையொட்டி, இக் கோயிலில் உள்ள ராகு , கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சணைகள் நடைபெற்றது.
மேலும், ரிஷபம், மிதுனம், கடகம்,கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ராசி நேயர்களுக்கு அர்ச்சணைகள் நடைபெற்றது.சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.