மதுரை:
மதுரையில் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு ,மாநிலத் தலைவர் மஞ்சுளா தேவி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் கவிதா , வரவேற்றார்.
விழாவில், மாநில சட்ட ஆலோசகர்கள் செல்வம் ராவணன், மாநில அமைப்பாளர் விஜயலட்சுமி, மாநில ஆலோசகர் தங்கதுரை, மதுரை மாவட்டத் தலைவர் வித்தியா, செயலாளர் உமா மகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் சக்தி தேவி, செயலாளர் மஞ்சுளா உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், மாநில இணைச் செயலாளர் திண்டுக்கல் விஜயலட்சுமி நன்றி தெரிவித்தார்.