காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு தடுப்பு ஊசி முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
இஸ்லாமியர்களின் புனித யாத்திரையாக கருதப்படும் ஹஜ் யாத்திரை விரைவில் செல்ல உள்ள இஸ்லாமியர்களுக்கு தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு 165 ஹஜ் பயணிகள் புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கான சிறப்பு தடுப்பு ஊசி முகம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் இருந்து சுமார் 165 ஆண்கள் பெண்கள் என அனைவரும் மருத்துவ முகாமிற்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் உடல்நிலை பரிசோதனை, ரத்த அழுத்தம் சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து, பாக்டீரியா மற்றும் வைரஸ் உள்ளிட்டவைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பு தடுப்பு ஊசியும் இவர்களுக்கு போடப்படுகிறது.
இவை அனைத்தும் மருத்துவ அட்டையில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார துறை அலுவலர்கள் பல இருந்தனர்