வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக நீ மோர் பந்தல் ஆரோக்கிய அன்னை திருத்தலம் முன்பாக திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ,மாவட்ட கழகச் செயலாளர் விஷால் கிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தாமு, இளைஞரணி மாவட்டச்செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் பசுமணியன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் , ஒன்றியச் செயலாளர் உசிலை ராஜேஷ் கண்ணன், பரமன்,தென்கரை மோகன், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.