Close
ஏப்ரல் 28, 2025 4:17 மணி

கோயிலுக்கு செல்லும் வழியை மறித்து உரிமை கொண்டாடுபவர் மீது புகார்..!

கோயில் பாதை ஆக்கிரமிப்புக்குறித்து அதிகாரியிடம் விளக்கும் ஊர் பொதுமக்கள்.

பல ஆண்டுகளாக திருக்கோயிலுக்கு சென்று வந்த வழியை மறித்துஉரிமை கொண்டாடும் நபரின் நபரின் செயல் மீது உரிய விசாரணை மேற்கொண்டு பக்தர்களுக்கு அவ்வழியே செல்ல அனுமதி தர வேண்டும் என மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கிளார் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கிளார் கிராமம்.

இந்த கிராமத்தில் தொன்மை மிக்க பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் சிவாலயம் குளத்துடன் அமையப்பெற்று பொதுமக்கள் தற்போது வரை வழிபட்டு வருகின்றனர்.

தற்போது ஊர் பொதுமக்கள் சிவ தொண்டர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக கட்டப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த ஆலயத்திற்கு செல்லும் வழி அதே ஊரை சேர்ந்த பரிமளம் என்பவர் தனக்கு சொந்தமானது எனவும் அவ்வழியே செல்ல அனுமதிக்க மாட்டேன் எனக் கூறி அதனை மறித்துள்ளதால் பொதுமக்கள் பக்தர்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை அந்த திருக்கோயில் பெயரிலேயே அந்த இடம் வருவாய்த்துறை ஆவணத்தில் உள்ளதால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கிராம பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு நிலம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் அது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top