சோழவந்தான்.
மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
இந்த பேரூராட்சியில், வாரம் தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை பாலமேடு பேரூராட்சி அருகே பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், பாலமேடு பேரூராட்சி சார்பில் 5 லட்சம்லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது, சுமார் 10,000 க்குமமேற்பட்ட பொதுமக்கள் கூடும் பாலமேடு வாரச்சந்தை நடைபெறும் மையப் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், எந்த நேரமும் விபத்து ஏற்பட்டு பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வாரச்சந்தையை பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமானப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிக ஆபத்தான நிலையில் ,தற்போது கட்டுமான பணி நடைபெற்று வருவதால் விபத்து ஏற்படும் பட்சத்தில் பெருமளவு உயிர் சேதம் ஏற்படும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆகையால், பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலரோ பாதி வேலைகள் முடியும்வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது கூறினால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும். ஆபத்து இல்லாமல் கட்டி முடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.