Close
மே 11, 2025 1:48 மணி

அரசு நிதியை வீணாக்கும் பசுமை குடில் திட்டங்கள்..!

பசுமை குடில் திட்டத்தில் வீணாக்கப்பட்டிருக்கும் குடில்கள்

போதிய பயிற்சி மற்றும் நிர்வாக திறன் குறித்த பயிற்சி இல்லாதது இது போன்ற இழப்பிற்கான காரணங்கள் என கூறப்படுகிறது..

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராம வளர்ச்சி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் கட்டியாம்பந்தல் ஊரட்சியில் கடந்த 2022-2023 ம் ஆண்டு தமிழக அரசின் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் சுமார் 2 லட்சத்து 48 ஆயிரது 600 ரூபாய் மதிப்பிட்டில் முருங்கை மர கற்றுகள் உற்பத்தி செய்யும் வகையில் பசுமை குடில் அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த குடில் அமைக்கப் பட்டத்துடன் சரி, இதுவரை அங்கு முருங்கை கன்றுகள் நடவு செய்யவும் இல்லை, பசுமை குடிலை பராமரிக்கவும் இல்லை என்று அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அந்த குடிலை முறையாக பராமரிக்காததால், பசுமை போர்வைகள் கிழிந்து, சேதம் அடைந்து காணப்படுகிறது.

மேலும் அந்தப் பசுமை குடிலானது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பசுமை குடில் என்ற திட்டத்தின் மூலம் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள் அந்தக் குடிலை பராமரித்து முறையாக முருங்கைக்கன்றுகள் நடவு செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top