கடையநல்லூர்:
சிங்கப்பூரில் வசித்து வரும் கடையநல்லூர் வம்சா வளியைச் சார்ந்த டாக்டர் ஹமீத் ரஹ்மத்துல்லா பின் அப்துல் ரசாக் சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜீராங்-வெஸ்ட் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் இவர் ஆளும் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வம்சாவளியைச் சார்ந்த ஒருவர் சிங்கப்பூரின் பாரளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறை யாகும். இவர் சிங்கப்பூரில் புகழ்பெற்ற எலும்பு மூட்டு மருத்துவ அறுவை சிகிட்சை நிபுணராவார்.
இவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை சிங்கப்பூர் தமிழராவார்.
இவருடைய தாத்தா,பாட்டி தமிழ்நாட்டின் கடையநல்லூரை பூர்வீகமாகக் கொண்டவர்.
கடையநல்லூரிலிருந்து மூன்று தலைமுறைக்கு முன்னர் சிங்கபூருக்கு புலம்பெயர்ந்து சென்ற ஒசைனா குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தந்தை ஒசைனா அப்துல் ரசாக் சிங்கப்பூரில் சுங்க இலாகா அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது குறித்து குடும்பத்தார்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.