Close
மே 11, 2025 10:43 மணி

கோடையை குளிர்விக்க திமுக இளைஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு..!

திமுக இளைஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல்

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் நீர்மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்.மோர் தர்பூசணி வழங்கினார்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம், மாதர்பாக்கத்தில் துணை அமைப்பாளர் ஜெ. மோகன் பாபு ஏற்பாட்டில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளிரி பிஞ்சு, குளிர்பானங்கள் ஆகியவற்றவை வழங்கினார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் பகலவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி ஹெச்.சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கேவி. லோகேஷ், ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட துணை செயலாளர் கதிரவன், உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், ஆகியோருப்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top