Close
மே 11, 2025 9:14 காலை

சோழவந்தான் அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

பால்குட ஊர்வலம்

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை ஆற்றில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால்குடத்துடன் சாமி ஆடி வந்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் அழகு குத்தியும் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top