Close
மே 12, 2025 8:14 காலை

திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் : கலெக்டர் பங்கேற்பு..!

மக்கள்நல திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் சங்கீதா

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பிர்கா திருவேடகத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு,மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் முன்னிலை வகித்தார். தாசில்தார் ராமச்சந்திரன் வரவேற்றார்.

இந்த முகாமில்,தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாவட்ட வழங்கல் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இணை இயக்குனர் கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் கால்நடை மற்றும் பராமரிப்பு துறை இணை இயக்குனர் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் வேளாண்மை துறை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர்
மாவட்ட சமூக நல அலுவலர் திட்ட அலுவலர் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பொது சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் உட்பட பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், இலவச வீட்டு மனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம், வேளாண் உபகரணங்கள், மரக்கன்றுகள், உள்ளிட்ட 55லட்சம் மதிப்பிலான பல்வேறு நல திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top