Close
மே 7, 2025 3:06 மணி

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் : கலெக்டர் வெளியிட்டார்..!

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாழ்வு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி முதல் பிரதியை வெளியிட, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர் பட்டியலில் பெற்றுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மாவட்ட ஊராட்சி குழு ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு, ஊராட்சி மன்ற தலைவர் என மொத்தம் 32 உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்காக 164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது எனவும் 43,244 ஆண் வாக்காளர்களும், 46047 பெண் வாக்காளர்களும், 15 இதர வாக்காளர்கள் என மொத்தம் 89 ஆயிரத்து 326 வாக்காளர்கள் உள்ளதாகவும் , வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி நாள் வரை வாக்காளர் பட்டியல் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top