Close
மே 6, 2025 5:59 மணி

இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் பஸ் மறியல்..!

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் நேற்று மாலை 5 மணி அளவில் பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி சாலையில் நிலக்கோட்டையில் இருந்து மதுரை ஆரப்பாளையம் சென்ற அரசு பேருந்தை மறித்து திடீரென பஸ் மறியல் செய்தனர்.

உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என கூறி பஸ் மறியல் செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவந்தான் இன்ஸ்பெக்டர ஆனந்தராஜ்மற்றும் காவல்துறையினர் மறியல் செய்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படையில் பஸ் மறியலை கைவிட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் :-

சமீப காலங்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதாலும் தாங்கள் விவசாய நிலங்களில் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் சிரமத்தில் இருந்து வருவதாகவும் இந்நிலையில் இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் வேறு வழி இன்றி பஸ் மறியல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . ஒரு ஏக்கருக்கு 60 மூடை நெல் என்று கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் எந்தவித முன்னுரிப்பும் இன்றி ஏக்கருக்கு 36 மூடை வீதம் தான் தற்போது கொள்முதல் செய்யப்படுவதாகவும், புகார் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து ஆலோசித்து உடனடியாக இரும்பாடி பாலகிருஷ்ணா புரத்தில் நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top