மதுரை:
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில். பலத்த டியூடர் மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த பல தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது. இதை தணிக்கும் வகையில் கடந்த இரு தினங்களாக வாடிப்பட்டி,, பள்ளபட்டி, நிலக்கோட்டை, குருவித்துறை, தென்கரை, சோழவந்தான், திருவேடகம், தேனூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை கடும் டியூடர் பலத்த மழை பெய்தது.
சோழவந்தான் நகரில் மாரியம்மன் கோயில் கழிவு நீர் கால்வாய் நீரானது சாலையில் குளம் போல பெருக்கெடுத்தது. மதுரை நகரில் தாசில்தார் சித்திவிநாயகர் கோயில் தெருவில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து குளம் போல தேங்கி நின்றது.
இது குறித்து இப் பகுதி மக்கள் மதுரை மாநகராட்சி செயற் பொறியாளர்,உதவிப் பொறியாளர், மதுரை மாநகராட்சி உறுப்பினர் ராஜா, கோ. தளபதி எம்.எல்.ஏ. கவனத்துக்கு கொண்டு சென்று கூட, சாக்கடை நீரில் ரோட்டில் தேங்குவதை தடுக்க ஆர்வம் காட்டவில்லையாம். மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் இப்பகுதியை, பார்வையிட்டு, சாலையை சீரமைக்க சமூக ஆர்வலர் முத்துராமன் கோரியுள்ளார்.