Close
மே 8, 2025 9:43 மணி

மீனாட்சி திருக்கல்யாணத்தையொட்டி அறுசுவை விருந்து..!

கோப்பு படம்

மதுரை.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். திருக்கல்யாண விருந்தில் லட்சகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காலை 7:00 மணி முதல் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம் , வெஜிடபிள் பிரியாணி. தக்காளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்ட ஆறு வகையான உணவுகள் வழங்கப்படுகிறது.

பத்து வரிசைகள் மூலம் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், குடிநீர் வசதி பக்தர்கள் உணவுக்கு பின் வெற்றிலை பாக்கு தாம்பூலம் , திருமாங்கல்ய கயிறு குங்குமம் பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டது.

கல்யாண விருந்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருமணம் மொய் எழுதும் நிகழ்ச்சியில் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் திருமண மொய் எழுதினர்.முன்னதாக, நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து,மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு
இன்று காலை 7 மணி முதல் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டு வருகிறது.
மதுரை பழமுதிர்ச்சோலை திருவருள் பக்தர் சபை சார்பில்,தலைவர் தங்கிஸ்வரன் செயலர் வெங்டேசன்
பொருளாளர் அரிமணிகண்டன் ஆகிய குழுவினர் கடந்த 25 ஆண்டுகளாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் விருந்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

திருக்கல்யாண அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பக்தர்களுக்கு 5 ஆயிரம் கிலோ அரிசியில் சாம்பார் சாதம்,தக்காளி சாதம் வெஜிடபிள் , பிரியாணி, புளி சாதம் தயிர் சாதம் உள்ளிட்ட ஆறுவகையான உணவு வகைகள் வழங்கப்படுகிறது.

மேலும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் 800 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்குகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top