Close
மே 8, 2025 10:38 மணி

மீனாட்சியம்மன் கோயிலில் தடுப்பு வேலியால் புதுமண தம்பதிகள்-குடும்பத்தினர் வேதனை..!

புதுமண தம்பதிகள்

மதுரை.

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று மதுரையில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை நேரில் காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மதுரை ஆதீனம் மடம் பகுதி சித்திரை வீதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து, பொதுமக்களின் நுழைவை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால், திருவிழாவுக்காக வெகுநேரம் காத்திருந்து வந்த பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்போதும் வழக்கம்போல சித்திரை வீதியில் அமர்ந்து தாலி பெருக்க விரைந்த பெண்கள், அனுமதி மறுக்கப்பட்டதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், மதுரை வண்டியூரை சேர்ந்த புதுமண தம்பதிகளின் கிருஸ்ணமூர்த்தி – நாகஜோதி பெற்றோர்களை தடுப்புகளை தாண்டி செல்ல அனுமதிக்கத்தால், புதுமண தம்பதிகள் ஒரு புறமும் பெற்றோர்கள் மறுபுறம் என புது தாலி மாற்றி மாலை மாற்றியது இரு வீட்டார் இடையே அசாதாரணமாக சூழல் நிலவியது.

குறிப்பாக தடுப்பை தாண்டி சுமார் 500 மீட்டருக்கு காலியாக இருந்த நிலையில் தடுப்புகளை தாண்டி சிறிது தூரத்தில் இரு வீட்டாரையும் மட்டும் அனுமதித்து தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து இருந்திருக்கலாம் எனவும், போலீசாரின் செயல் வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top