உசிலம்பட்டி:
திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, உத்தப்பநாயக்கனூரில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித் பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இதில், திமுக வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் பெத்தணன் முன்னிலையில், திமுக தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசின் திட்டங்கள் குறித்து நான்கு ஆண்டு சாதனைகளை குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில், உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ்.ஓ. ஆர்.தங்கப்பாண்டியன், உசிலை மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.பழனி, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ். வி. எஸ். முருகன், செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் ,வடக்கு ஒன்றியத்தில் உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.