Close
மே 9, 2025 11:44 மணி

காஞ்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே சத்துணவு பணியாளர்கள் நூதன போராட்டம்..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டை நாமமிட்டு மடிபிச்சை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி காஞ்சி மாவட்ட கூட்டமைப்பினர்

2 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி காஞ்சி மாவட்ட கூட்டமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டை நாமமிட்டு மடிபிச்சை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் மாநில கூட்டமைப்பு, தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பட்டை நாமமிட்டும் , மடிபிச்சை ஏந்தும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்தது.

அதன்படி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமஸ் இளங்கோவன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டை நாமம் மற்றும் பிச்சை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் , திமுக தேர்தல் வாக்குறுதியின் படி சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 6750 அகவிலைப்படி உடன் வழங்கிடுதல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கினல் நீதியரசர். ஜெ. பட்டுதேவானந்த் தீர்ப்பின்படி அதனை செயல்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்ட நிகழ்வில் மாவட்ட நிதி காப்பாளர் குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தணிகை மணி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் திருமலை, ராமமூர்த்தி, மாணிக்கம் உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top