ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் ஆனந்தாபேட்டை பகுதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை எம்எல்ஏ எழிலரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட எண்ணைக்கார தெருவில் இயங்கி வந்த நியாயவிலைக் கடை, தொடங்கப்பட்ட நாளிலிருந்து வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நிரந்தர கட்டிடம் அமைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியின் கீழ் ₹18.10 லட்சம் மதிப்பீட்டில் 19-வது வார்டு ஆனந்தாபேட்டை தெருவில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தை, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், திமுக பகுதி கழக செயலாளர் எஸ். சந்துரு, திமுக நிர்வாகிகள் வடமலை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.