Close
மே 10, 2025 1:47 காலை

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இரு சக்கர வாகன இயக்கம்..!

இருசக்கர வாகன இயக்கம்

உசிலம்பட்டி.

தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி நடைபெறும் இருசக்கர வாகன இயக்கம் உசிலம்பட்டி வழியாக தேனி சென்றது.

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மே 5 முதல் 16 ஆம் தேதி வரை குமரி முதல் சென்னை வரை இருசக்கர வாகன இயக்கத்தை நடத்தி வருகிறது.

இந்த பேரணி , திருமங்கலம் வழியாக உசிலம்பட்டி பகுதிக்கு வருகை தந்தது, உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்கத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் வாக்குறுதி படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top