சோழவந்தான்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாதசாமி ஆலயத்தில் மே.11.ம் தேதி மாலை 4.30..மணிக்கு குருப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறுகிறது.
இக் கோயிலில் ஸ்தல நாதர் ராகுவுக்கு அதிபதியாவார். ஸ்தல மூர்த்தி சனீஸ்வரலிங்கம், சனி,ராகு குருபகவான் இணைந்த புனித திருக்கோயில் ஆகும். இக் கோயிலில் பல ஆண்டுகளாக, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி யாக பூஜைகள் நடைபெறுகிறது.
மே.11..ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, குருபகவானுக்கு அபிஷேகமும், நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை , தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில், கணக்கர் சி. பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் மதுரை அண்ணாநகர் தாசில்தார் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் மே.11..ம் தேதி ஞாயிறு காலை 9.. மணிக்கு குருப் பிரீத்தி ஹோமம், நவகிரக ஹோமம், அபிஷேகம், பரிகார அர்ச்சணைகள் நடைபெறும். நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.