சோழவந்தான்:
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா 5 நாட்கள் நடைபெற்றது.
அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா நடந்தது. மூன்றாம் நாள் திருக்கல்யாணமும், நான்காம் நாள் திருத்தேர் நான்கு ரத வீதியும் உலாவும் நடந்தது. இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று சுவாமி அம்பாளும் ரிஷப வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர். காடுபட்டி சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். தேர்செல்லும் ரத வீதியில் மின் வயர்களை அப்புறப்படுத்தி தேர் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் மின் வயர்களை இணைப்பு கொடுத்தனர்.
தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை பொதுமக்கள் வழங்கினர்.