Close
மே 12, 2025 8:14 காலை

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி திருவிழா..!

தீர்த்தவாரி திருவிழா

சோழவந்தான்:

மதுரை மாவட்டம்,சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடந்தது.10ம் நாள் உபயதார் சங்கங்கோட்டை கிராமத்தார் சார்பாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடந்தது.

11ம் நாள் விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி திருவிழா கொடி இறக்கம் நடந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று தீர்த்தம் ஆடி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இங்கு அம்மன் வண்ணப் பூக்களால் மின்னொளி அலங்காரத்தில் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு டாக்டர் குகசீலரூபன் தலைமையில் ஆன்மீக சிந்தனை பட்டிமன்றம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிகாலை அம்மன் ரிஷபம் வாகனத்தில் பவனி வந்தது. மாலை பட்டாபிஷேகம் வீர விருந்து நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி, உபயதார்கள், கோவிலை சேர்ந்தவர்கள், கோவில் பணியாளர் கவிதா மற்றும் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆதி பெருமாள், கோவில் ஆலோசகர் முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதார பணி செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top