Close
மே 14, 2025 5:21 மணி

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் : தங்கத் தேர் இழுத்த அதிமுகவினர்..!

தங்கத்தேர் இழுத்த அதிமுகவினர்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அழகர் மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவில். இங்கு நேற்று மாலையில் அதிமுக பொது செயலாளர் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி | பழனிசாமி பிறந்தநாள் விழாவையொட்டி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளர் வி. வி.ராஜன் செல்லப்பா தலைமையில், செங்கோல் பிடித்து தங்க தேரோட்டம் நடந்தது.

கோவிலை சுற்றி தேர் வந்து நின்றது. முன்னதாக, சோலைமலை முருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், இளைஞர் அணி செயலாளர் வக்கில் ரமேஷ், ஒன்றியச் செயலாளர்கள் முருகன், பொன்னுச்சாமி, வெற்றி செழியன், ராஜேந்திரன், அவைத் தலைவர், மாவட்ட ஒன்றிய, கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top