Close
மே 16, 2025 11:07 மணி

2026ல் எடப்பாடியார் தலைமையில் ஜெ., ஆட்சி அமைய 100 கிராம கோயில்களில் சிறப்பு பூஜை..!

பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர்

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பாக எடப்பாடியார் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வேட்டி சேலை துண்டு 3 அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கும் விழா மற்றும் பேரூர் கழக வார்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்த விழா விற்கு பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார் தலைமை தாங்கி னார். பேரவை இணைச் செயலா ளர் ராஜேஷ் கண்ணா தொகுத்து வழங்கினார்.கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் மாணிக்கம்,விவசாய அணி மாநில துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட பொருளாளர் திருப்பதி, வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்து பேசினர்.

பேரூர் துணைச் செயலாளர் சந்தனத் துரை வரவேற்றார். இந்த விழாவில் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனித கடவுள் எம்ஜிஆர் தமிழர் குலசாமி ஜெய லலிதா நல்லாசியுடன் கழக பொது ச் செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழாவில் 2026 ஆண்டு அவர து தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர 100 கிராம கோயில்களின் சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட உள்ளது. பூத்துக்கமிட்டி கிளை நிர்வாகிகள் தினந்தோறும் ஒரு மணி நேரம் பொதுமக்களை நேரில் சந்தித்து திமுக ஆட்சியின் அவல நிலைகளை வீடு வீடாக சென்றுதெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

அராஜக ஆட்சிக்கு குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..அ.தி.மு.க வெற்றியில் தமிழகத்தில் அதிக வாக்கு வாங்கிய தொகுதி சோழவந்தான் தொகுதியாக இருக்க வேண்டும் என்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி சேலை துண்டு மற்றும் அசைவ அன்னதானமும் 9 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரொக்க பணமும்வழங்கினார்.

இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், ஒன்றிய அவை தலைவர் ஆர் எஸ் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் முத்து கண்ணன், பேரவை பேரூர் செயலாளர்கள் தனசேகரன், 18 வார்டு செயலாளர்கள் மற்றும் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், பொறியாளர் குரு பார்த்திபன், மகளிர் அணி மாவட்ட நிர்வாகி சாந்தி மருதாயி ஜோதி உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top