Close
மே 17, 2025 5:01 காலை

காஞ்சிபுரத்தில் பயிரிடப்பட்ட அளவைவிட நெல் கொள்முதல் அளவு இரு மடங்கானது எவ்வாறு? விவசாயிகள் கேள்வி?

கேள்வி எழுப்பிய விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் கூட்டம் ஆரம்பித்தவுடன், அனைத்து விவசாயிகளும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 60 நாட்கள் ஆகியும் பணம் வழங்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அடுத்த போகம் விவசாயம் செய்ய இயலாத நிலையில் அரசு உருவாக்கி உள்ளது என குற்றம் சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் பதில் அளித்தும், இதுவரை இதற்கு நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் முறையற்ற பதில் தெரிவிப்பதும் விவசாயிகளின் வஞ்சிப்பது போல் செயல்பட்டது பெரும் மன வருத்தத்தை அளித்ததாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அளவு நெல் எவ்வாறு வந்தது எனவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட நெல்லை விட கூடுதலாக கொள்முதல் எவ்வாறு நடைபெற்றது இதில் பெரும் முறைகேடு உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு விவசாயிகள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இறுதியாக இன்னும் ஓரிரு வாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய பணம் வழங்கப்படும் என மண்டல மேலாளர் தெரிவித்ததும் கேள்வி விவசாயிகள் சற்று சமாதானம் அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top