சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை காளியம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாகினர்.
மன்னாடிமங்கலம் பகுதியில் இருந்து திருமங்கலம் செல்லும் குடிநீர் குழாயில் தென்கரை காளியம்மன் கோவில் அருகில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறிய பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பேருந்துகளை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர் குடிநீர் பள்ளத்தில் விழுந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் வாகனத்தை எடுத்துச் சென்ற அவல நிலையும் ஏற்பட்டது.
குறிப்பாக, தென்கரை ஊத்துக்குளி ஆகிய கிராமப் பகுதியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் குடிநீர் வீணாக செல்கிறது. மேலும், குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்படுகிறது இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால், மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது நான் காரணமாக பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். பஸ் ஓட்டுநர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், உடனடியாக குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய வேண்டும் கனமான அளவில் குடிநீர் குழாய் பைப்புகளை பதிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.