சோழவந்தான் :
மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற முகாமில், கம்ப்யூட்டர் கண் பரிசோதனை கண் கண்ணாடி பரிசோதனை மாறுகண் குறைபாடு கண்டறிதல் பரிசோதனை தூரம் மட்டும் கிட்டத்து பார்வை குறைபாடு கண்டறிதல் பரிசோதனை கண்புரை நோய் கண்டறிதல் கண்ணில் தசை வளர்தல் நோய் கண்டறிதல் சர்க்கரை நோய் காரணமாக கண்ணில் ஏற்படும் குறைபாடுகள் குறித்த பரிசோதனை குழந்தைகளுக்கான கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
முகாமில், கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு அம்சமாக கண் கண்ணாடி குறைந்த விலையில் வழங்கியும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யவும் அனைத்து வகையான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் கண் கண்ணாடியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள லேசர் சிகிச்சையில் சிறப்பு சலுகை ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
மேற்கண்ட சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு வருவோருக்கு இலவசமாக ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது . இந்த முகாமில், நகர கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் வீரணன் மற்றும் வங்கி பணியாளர்கள் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர். சோழவந்தான் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்களை பரிசோதனை செய்து பயன்
பெற்றனர்.