Close
மே 20, 2025 9:14 மணி

10,11,12ம் வகுப்பு மாணவிகளுக்கு மதுரை மேயர் பாராட்டு..!

மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டிய மேயர் இந்திராணி பொன்வசந்த்

மதுரை:

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் (19.05.2025) பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

2024-2025 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மதுரை மாவட்ட அளவில் அதிகப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்
பள்ளி மாணவி ஜி.மலர்விழி, (மொத்த மதிப்பெண் 590) அம்மாணவியை,மேயர், ஆணையாளர் ஆகியோர் பாராட்டி நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 24 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில், 2024-2025 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பில் மொத்தம் 1737 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியதில் 1585 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநகராட்சி பள்ளிகள் 91.25 தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது.

அதில், மாசாத்தியார் மாநகராட்சி, கம்பர் மாநகராட்சி, பாரதியார் மாநகராட்சி, தல்லாகுளம் மாநகராட்சி, பாரதிதாசனார் மாநகராட்சி, என்.எம்.எஸ்.எம் மாநகராட்சி, உமறுப்புலவர் மாநகராட்சி, மணிமேகலை மாநகராட்சி ஆகிய 8 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீதம் பெற்று முதலிடமும், இரண்டாம் இடத்தில் வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.17 சதவீதமும், மூன்றாம் இடத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 96.50 சதவீதமும் பெற்றுள்ளது.

மதுரை மாநகராட்சி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்ற மாணவி ஆர்.யோகவி (மொத்த மதிப்பெண் 486) கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்
பள்ளி, இரண்டாம் இடம் பெற்ற மாணவன் கே.கமலேஷ் (மொத்த மதிப்பெண் 484) இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடம் பெற்ற மாணவி பி.சாதனா (மொத்தம் மதிப்பெண் 481) வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகள்,

10 ஆம் வகுப்பில் பாடம் வாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவ, மாணவியர்களையும்,
மதுரை மாநகராட்சி 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 2095 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 1881 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநகராட்சி பள்ளிகள் 89.79 தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது. அதில் கம்பர் மாநகராட்சி பள்ளி, பாரதிதாசனார் மாநகராட்சி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடமும்,

நாவலர் சோமசுந்தர பாரதியார் மேல்நிலைப்பள்ளி 99.44 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடமும், கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.32 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்ற மாணவி எம்.ரம்யா (மொத்த மதிப்பெண் 576) காக்கை பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரண்டாம் இடம் பெற்ற மாணவி ஓ.ஜே.கோபிகா (மொத்த மதிப்பெண் 571) ஈ.வெ.ரா.நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடம் பெற்ற மாணவி எம்.தேவஸ்ரீ (மொத்தம் மதிப்பெண் 565) மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகள்,

11 ஆம் வகுப்பில் பாடம் வாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவ, மாணவியர்களையும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் முதல் மூன்று இடம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்று தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களையும் மேயர், ஆணையாளர் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கல்விபிரிவு கண்காணிப்பாளர்கள் ரமேஷ், வீரபாலமுருகன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சண்முகத்திருக்குமரன், மாமன்ற உறுப்பினர்கள் நூர்ஜஹான், ஜென்னியம்மாள், தலைமை ஆசிரியர்கள், கல்விப்பிரிவு பணியாளர்கள் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top