Close
மே 20, 2025 9:19 மணி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 303 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 06 ஏழை கிறித்தவ மகளிர் பயனாளிகளுக்கு தலா ரூ.15,000/- வீதம் மொத்தம் ரூ.90,000/- மதிப்பீட்டிலான கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கூடை பின்னல், கல்வி உதவித்தொகை, சிறுதொழில் உதவித்தொகை ஆகியவைகளுக்கான காசோலைகளையும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் பயனாளிகளுக்கு எச்டி செட்டாப்பாக்ஸ் மற்றும் அதற்கான ரூ.2,20,000/- மதிப்பீட்டிலான கடனுதவிக்கான ஆணைகளையும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 04 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,359/- வீதம் மொத்தம் ரூ.25,436/- மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்களையும் என, ஆக மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.3,35,436/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை, இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீர்த்தனா மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயமணி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top