Close
மே 21, 2025 3:10 காலை

‘பயிர்கள் பூக்கும் காலங்களில் ஜிங்க்சல்பேட்டு அவசியம்ங்க’..! வேளாண் உதவி இயக்குனர் தகவல்..!

மானிய விலையில் ஜிங்க் சல்பேட் வழங்கும் வேளாண் துணை இயக்குனர் மாலதி, அருகில் மதுக்கூர் வேளாண் துணை இயக்குனர் திலகவதி

பயிரின் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவங்களில் முக்கிய பங்காற்றும் ஜிங்க்சல்பேட்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துநெல் சாகுபடி செய்யும் வயல்களில் மண்ணிலிருந்து அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும் நுண் ஊட்டச்சத்துகளும் பயிரால் எடுத்துக் கொள்ளப்படுவதால் மண்ணில் நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. நெல் சாகுபடி செய்யும் வயல்களில் முக்கியமாக துத்தநாகம் எனப்படும் ஜிங்க்சல்பேட் பற்றாக்குறை ஏற்படுகிறது.

விவசாயிகள் பொதுவாக தழை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை யூரியா சூப்பர் பொட்டாஷ் டிஏபி மற்றும் கலப்பு உரங்களாக சரியான அளவில் இட்டு பயிரின் முக்கிய சத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். ஆனால் நுண்ணூட்ட சத்துக்களை உரிய முக்கியத்துவம் தந்து வழங்காததால் பற்றாக்குறை ஏற்படுகின்றது. முக்கியமாக மண்ணில் உள்ள தழைச்சத்தினை பயிர் எடுத்துக் கொள்ளவும் அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் ஜிங்க்சல்பேட் முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் பயிர் நன்கு வளரவும் அதிக தூர் கட்டவும் நெல்லில் பால் பிடிக்கும் திறன் மற்றும் கருவுறுதல் சரியாக நடைபெறவும் ஜிங்க் சல்பேட் மிக அவசியம். நெல்லில் தொடர்ந்து நீர்தேங்கி இருப்பதால் மண்ணில் கரையாத உப்புகளின் அளவு அதிகரித்து துத்தநாக சத்துபற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி குன்றி இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுடன் வெளிறி காணப்படும்.

இலைகளின் நடு நரம்புகளை ஒட்டிய பகுதிகள் வெண்மை நிற கோட்டுடன் இருப்பது தான் வெளுக்கத் துவங்கி விடும். நினைத்தாலின் அகலம் குறைந்து சிரித்து காணப்படும். இதனால் பயிரின் வளர்ச்சி குறைந்து குட்டையாக காணப்படும் தூர்களின் எண்ணிக்கையும் இதனால் விளைச்சலும் குறையும். தென்னை போன்ற பிற பயிர்களில் பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து பூக்கள் கொட்டாமல் அதிக காய் பிடிக்கும் திறனை உருவாக்கும்.

எனவே விவசாயிகள் நெல்பயிரை பொருத்தவரை ஏக்கருக்கு 10 கிலோ ஒரு முறையும் நாட்டு நட்ட 15 முதல் 30 நாட்களுக்குள் மீள இரண்டாம் முறையும் 10 கிலோ ஜிங்க்சல்பேட் நுண்ணூட்ட உரத்தினை இடவும். தென்னையில் ஒரு மரத்துக்கு 250 கிராம் வரை இடுவதன் மூலம் அதிக பூக்கள் உருவாவதை பூக்கள் கொட்டாமல் தடுப்பதை உறுதி செய்கிறது.ஒரு ஆதார் கார்டுக்கு 10 கிலோ விதம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

மதுக்கூர் வட்டாரத்தில் கீழக்குறிச்சி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் ஜிங்க்சல்பேட் நுண்ணூட்ட உரம் 10 கிலோ பைகளில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் அனைவரும் ஜிங்க்சல்பேட் நுண்ணூட்ட உரங்களை பயிர்களுக்கு அளித்து உற்பத்தியை பெருக்கிட வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டார். மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஜிங்க்சல்பேட் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலதிக விவரங்களுக்கு தங்கள் தொகுதி வேளாண் உதவி அலுவலர் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top