காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
திருவிழா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் அறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற்றது.
இதில் துணைமேயர் குமரகுருநாதன் , மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கி தீண்டாமை உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த மாமன்ற கூட்டத்தில் 95 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக மாநகர் முழுவதும் குப்பைகள் சேகரிப்பில் வாகனங்களால் தேக்கும், குப்பை கிடங்கி முறையற்ற பணிகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் விரைவில் தீர்வு காணுவதாகவும், குப்பைகள் சேகரிப்பு மற்றும் அதனை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்திற்கும் தனியாக ஒரு கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தங்கள் வார்டு வாரியான பிரச்சனைகளை மாமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைக்க அனைத்திற்கும் பதில் அளிக்கப்படும் அதற்கான தீர்வு காண முயல்வதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.